SuperTopAds

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தை உடைத்த படையினர்! - புதுக்குடியிருப்பில் சம்பவம்

ஆசிரியர் - Admin
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தை உடைத்த படையினர்! - புதுக்குடியிருப்பில் சம்பவம்

புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அலுவலகம், படையினரால் உடைக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் தி.கிந்துஜன், தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி செஞ்சோலையில் உயிரிழந்த மாணவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் 16.08.18 அன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் யாரும் இல்லாத வேளை அங்கு சென்ற 8 படையினர் கதவினை உடைத்து உட்புகுந்து சேதப்படுத்தியுள்ளதாகவும் இதனை அருகில் இருந்த அயலவர்கள் நேரில் கண்டு வீட்டின் உரிமையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.