முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கான அனுதாப அலையை உருவாக்க சதி நடக்கிறதா?

ஆசிரியர் - Editor I
முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கான அனுதாப அலையை உருவாக்க சதி நடக்கிறதா?

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை பதவி விலக வைப்பதன் ஊடாக அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சருக்கான அனுதாப வாக்குகளை சேகரிக்கவும் தமிழரசு கட்சிக்கு சேறு பூசவும் சில மறைமுக செயற்பாடுகள் இடம்பெறுவதாக வடக்கு அரசியல் வட்டாரங்களில் செய்திக ள் உலாவி வருகிறது.

இந்த செய்திகளின் படி, வடமாகாண சபையின் ஆயுள் காலம் முடிவுறுவதற்கு இன்னமும் 73 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அடுத்து வரும் மாகாண சபையில் ஓர் கனிசமான இடத்தைப் பிடிக்கும் அரசியல் நகர்வுகள் பல மட்டங்களில் ஆராயப்படுகின்றது. 

இதற்காக தற்போது வடக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் டெனீஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள வழக்கினை மையமாக வைத்து முதலமைச்சர் பதவி விலகினால் டெனீஸ்வரனின் வழக்கு அன்றோடு முடிவிற்கு வரும்.

அதேநேரம் அடுத்த மாகாணசபை தேர்தலிற்கு முதலமைச்சர்  அனுதாப அலையும் மிகப் பிரகாசமாகவே காணப்படும். இதனைப் பயன்படுத்தி முதலமைச்சருடன் கூட்டினைவதன் மூலம் தமக்கும் சில இடங்களைப் பிடித்துவிட முடியும் எனத் திட்டமிடப்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது கூட்டமைப்பின் தலமைகள்  ஒன்று கூடல்கள் மூலம் சுமூகத் தீர்விற்கு முயற்சிக்கும் நிலையில் இவ்வாறான நெருக்கடிகளை ஏற்படுத்துவது உசிதமல்ல கூட்டமைப்பின் தலமையின் முடிவு கிட்டும் வரையில் எந்தவொரு நடவடிக்கையும் இடம்பெறாது. 

என முதலமைச்சர் குறிப்பிட்டதனால் முதலமைச்சர் பதவி விலகும் திட்டம் தொடர்பில் ஆராய்வதாக அந்த செய்திகள் மேலும் கூறுகின்றன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு