SuperTopAds

சாலையில் புலிகளின் சீருடை, கனரக துப்பாக்கி ரவைகள் மீட்பு! - வலைஞர்மடம் அகழ்வுப் பணி ஒத்திவைப்பு

ஆசிரியர் - Admin
சாலையில் புலிகளின் சீருடை, கனரக துப்பாக்கி ரவைகள் மீட்பு! - வலைஞர்மடம் அகழ்வுப் பணி ஒத்திவைப்பு

முல்லைத்தீவு - வலைஞர்மடம் பகுதியில், விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் புதைத்து வைத்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில், இன்று முன்னெடுக்கப்படவிருந்த அகழ்வுப் பணிகள் பிற்போடப்பட்டுள்ளன.

சாலை பகுதியில், விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் இடம் ஒன்றில், மாவட்ட நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய, நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில், அகழ்வுப் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, விடுதலைப் புலிகள் பயன்படுத்திய கனரக இயந்திரத் துப்பாக்கியின் தோட்டாக்களும் விடுதலைப் புலிகளின் சீருடை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, வலைஞர்மடம் பகுதியிலும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அகழ்வுப் பணி முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும், குறித்த பகுதிக்கு நீதிமன்றத் தரப்பினர் வருகை தராத காரணத்தால், குறித்த அகழ்வுப் பணி பிற்போடப்பட்டுள்ளது.