ஈன பயலுகளின் வெறிச்செயல்!! கணவனையிழந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!

முல்லைத்தீவு விசுவமடு கிழக்கு பகுதியில் கணவனை இழந்த பெண் தலைமை குடும்பத்திற்கு வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்ட 08 ஆடுகளும், 03 குட்டிகளும் விசமிகளால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
விசமிகளால் திட்டமிடப்பட்டு இந்த ஆட்டுக்குட்டிகள் கொலை செய்யபட்டுள்ளதாக குறித்த குடும்பத்தலைவி கவலை தெரிவித்துள்ளார்.
இந்த ஆடுகளை வாழ்வாதாரமாக பெற்று அதனை பராமரித்து வந்த நிலையில் அதன் பிரயோசனத்தை பெற முன்பே இந்த ஈன செயலினை விசமிகள் மேற்கொண்டுள்ளனர்.
இதேபோன்று கடந்த வாரத்தில் கிளிநொச்சியில் ஒரு பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதாரமாக வழங்கபட்ட பசு ஒன்றினையும் விசமிகள் வெட்டி படுகொலை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.