தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் யாழில் அனுஷ்டிக்கப்பட்ட கறுப்பு யூலை

ஆசிரியர் - Admin
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் யாழில் அனுஷ்டிக்கப்பட்ட கறுப்பு யூலை

சிங்கள பௌத்த பேரினவாதிகளால் கடந்த-1983 ஆம் ஆண்டு திட்டமிட்ட வகையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களை நினைவு கூர்ந்து கறுப்பு யூலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை (23) பிற்பகல் யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 05.30 மணி முதல் யாழ்.கொக்குவில் சபாபதிப்பிள்ளை வீதியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருமதி- வாசுகி சிவகுமார் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. 

இரண்டு நிமிட மெளன வணக்கத்துடன் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈகைச் சுடரேற்றினார். 

அதனைத் தொடர்ந்து கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.இளங்கோ, ஊடகவியலாளர் மதி, கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கு ஈகைச் சுடரேற்றி உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கறுப்பு யூலையை நினைவு கூரும் வகையிலான நினைவுரைகளும் நடைபெற்றன.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு