SuperTopAds

யாழில். கனடா கல்விக் கண்காட்சி ஆரம்பம்

ஆசிரியர் - Editor II
யாழில். கனடா கல்விக் கண்காட்சி ஆரம்பம்

இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில்  மிகப்பிரமாண்டமான முறையில் கனடா கல்விக் கண்காட்சி யாழ்ப்பாணம் வலம்புரி தனியார் விடுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  ஆரம்பமானது. குறித்த கண்காட்சி நாளைய தினம் சனிக்கிழமையும் நடைபெறவுள்ளது. 

கனடா இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் குலா செல்லத்துரை, மற்றும் குறித்த சம்மேளனத்தின் இலங்கைக்கான தலைவர் பியந்த சந்திரசேகர மற்றும் பலதரப்பட்ட துறைசார் அதிகாரிகள் பங்கேற்கபுடன் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 இந்த  கண்காட்சியானது இலங்கை வர்த்தக சபை, இலங்கை கனடா வணிக மன்றம், கனடா உயர் ஸ்தானிகராலயம், கனடா இலங்கை வணிக மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்