”சுவசொிய” அம்புலன்ஸ் சேவை அங்குராா்ப்பணம் செய்யப்பட்டது...

ஆசிரியர் - Editor I
”சுவசொிய” அம்புலன்ஸ் சேவை அங்குராா்ப்பணம் செய்யப்பட்டது...

இந்திய மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சுவசொிய அம்புலன்ஸ்சேவை இன்று பிற்பகல் 4.30 மணிக்கு யாழ்.மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அங்குராா்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 

1990 அவசர இலக்கமாக கொண்ட இந்த அம்புலன்ஸ் சேவையை பிரதமா் ரணில் விக்கிரம சிங்க நேரடியாகவும், இந்திய பிரதமா் இணையவழி நேரலை ஊடாக வும்  ஆரம்பித்து வைத்துள்ளாா்கள். 

இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சா் சீ.வி.விக்னேஷ்வரன், நாடாளுமன்ற உறுப்பினா்கள், மாகாணசபை உறுப்பினா்கள், மத்திய அமைச்சா்கள், மாகாண அமைச்சா்கள் மற்றும் சுகாதார அமைச்சு அதிகாாிகளும் கலந்து கொண்டிருந்தனா். 

இந்த நிகழ்வில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி இணையவழி நேரலை ஊடாக மக்களுக்கு உரையாற்றினாா். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு