ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்த வீரர்

ஐபிஎல்(ipl) கிரிக்கெட் வரலாற்றில் லக்னோ அணி வீரர் நிகோலஸ் பூரன்(nicholas-pooran) புதிய சானை ஒன்றை படைத்துள்ளார்.
இதன்படி நேற்று(27) நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் நிகோலஸ் பூரன் 18 பந்தில் அரை சதமடித்து அசத்தினார்.
இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் 20 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் அதிக அரை சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் நிகோலஸ் பூரன் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
அவர் இதுவரை ஐ.பி.எல். தொடரில் 4 முறை 20-க்கும் குறைவான பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.