SuperTopAds

கஞ்சா செடியை வளர்த்தவர் கைது

ஆசிரியர் - Admin
கஞ்சா செடியை வளர்த்தவர் கைது

கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் வியாழக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலையே புன்னாலைக்கட்டுவான் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் புகையிலை தோட்டத்தில் , புகையிலை கன்றுகளுக்கு மத்தியில் மிக சூட்சுமமான முறையில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கஞ்சா செடியை மீட்டதுடன், அதனை பயிரிட்ட குற்றச்சாட்டில், 42 வயதுடையவரை கைது செய்தனர்.

மீட்கப்பட்ட கஞ்சா செடி சுமார் 4அடி உயரம் எனவும், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டவரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சுன்னாக பொலிஸார் சந்தேக நபரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.