யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் (04) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நண்பகல் 12மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பளத்தை பொய்யாக உயர்த்தாதே, பதவி வெற்றிடங்களை உடனடியாக நிரப்பு, இடமாற்ற விண்ணப்பங்களுக்கு நடவடிக்கை எடு, பொதுச் சேவைக்கு 64%, எங்களுக்கு 58% நீதியா!, OT வீதத்தை மாற்றாதே, MCA குறைப்பை நிறுத்து போன்ற கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பபட்டன.
நாடாளாவியரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.