டிப்பர் மீது பொலிஸ் சூடு- ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை(02) காலை சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பொலிஸார் குறித்த வாகனத்தை பருத்தித்துறை - பொன்னாலை வீதியில் தடுக்க முற்பட்டனர். பொலிஸாரின் கட்டளையை மீறி டிப்பர் பயணித்த நிலையில் டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது டிப்பரில் இருந்து ஒருவர் தப்பிச் சென்ற நிலையில் இன்னொருவர் காயமடைந்தார். குறித்த டிப்பர் வாகனத்தில் கஞ்சா துகள்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் தடயவியல் பொலிஸார் மேற்கொண்டதுடன் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.