SuperTopAds

கொழும்பு வரும் மோடி - அதற்குள் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை!

ஆசிரியர் - Admin
கொழும்பு வரும் மோடி - அதற்குள் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை!

இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதே தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எதுவுமில்லை என ஜனாதிபதி அறிவிப்பதற்கு காரணம் என சண் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.     

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைதுசெய்யுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துயான்கொந்த உத்தரவிட்டார். முன்னாள் போர் விமானி ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் சம்மதத்துடன் இந்த திட்டத்தை அறிவித்தார்.

இந்த திட்டம் பாதாளஉலகத்தவர்களுடன் இணைந்து செயற்பட்ட படையினருக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டத்தையும் உள்ளடக்கியுள்ளது. இது சுலபமான நடவடிக்கையில்லை.

புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிசூட்டு சம்பவம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என ஜனாதிபதி தெரிவித்தார். பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் நாட்டில் பாதுகாப்பு நிலைமை சீராகயிருப்பதற்கான அவரது உறுதிப்பாட்டை குறிக்கின்றது. தேசிய பாதுகாப்பு அம்சத்தை அவர் குறைத்து மதிப்பிட வேண்டிய தேவையில்லை.

அவர் நாட்டின் ஸ்திரதன்மையை உறுதி செய்யவேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்கள் உள்ளன. இந்த விடயத்தில் இரண்டு காரணங்கள் முக்கியமானவை,

முதலாவது இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கை விஜயம். இது தொடர்பில் இந்தியாவிற்கும் கொழும்பிற்கும் இடையில் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. தேசிய புத்தாண்டு கொண்டாட்டங்களிற்கு சில நாட்களிற்கு முன்னர் இந்திய பிரதமர் இலங்கை வருவார். இரண்டு நாள் விஜயத்திற்கு திட்டமிடப்படுகின்றது மோடி ஒரு நாள் இரவு கொழும்பில் தங்கியிருப்பார்.

இரண்டாவது பெருமளவு சுற்றுலாப்பயணிகளின் வருகையை எதிர்கொண்டுள்ள சுற்றுலாத்துறை தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலால் பாதிப்பை எதிர்கொள்வதை தவிர்ப்பது.

இந்த நோக்கங்களை அடிப்படையாக வைத்து ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் கடந்த செவ்வாய்கிழமை இராணுவத்தின் 15 சிரேஸ்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.இதன் பின்னர் கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளையும் ஜனாதிபதி சந்தித்தார்.

இந்த சந்திப்பில் படைவிட்டோடிகளை கைதுசெய்வது குறித்த அரசாங்கத்தின் திட்டம் குறித்து ஜனாதிபதிகருத்து தெரிவித்தார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி புனர்வாழ்வு திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளார். படைவிட்டோடிகளில் பாதாளஉலகத்தவர்களுடன் இணைந்து செயற்படுபவர்களை கண்டுபிடிப்பதற்காக பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியை ஜனாதிபதி நாடினார்.

இவ்வாறு படையிலிருந்து தப்பியோடியவர்களின் மறைந்திருக்கும் இடங்கள் வீடுகளை சோதனையிடும் திட்டமும் காணப்படுகின்றது.