வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான ஓய்வு பெற்ற அதிபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நின்ற வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முன்னாள் அதிபரான விசுவாசம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
பூநகரி மத்திய கல்லூரி அதிபரும் , உயிரிழந்த முன்னாள் அதிபரும் கடந்த சனிக்கிழமை பூநகரி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை தனங்களப்பு பகுதியில் நிறை போதையில் நின்ற வன்முறை கும்பல் அவர்களை வழிமறித்து மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கானவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஓய்வு பெற்ற அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.