யாழ்.மாவட்டத்தின் நான்கு பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் நியமனம்!

யாழ்.மாவட்டத்தின் பருத்தித்துறை, வேலணை, நல்லூர் மற்றும் கோப்பாய் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பிரகாரம் இந்த நியமனம் நேற்று முன்தினம்(18) வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளில் இடம்பெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைவராகச் செயற்படவுள்ளார்.