SuperTopAds

மகா கும்பமேளாவில் நீராடியதாக போலி புகைப்படம்: காட்டமாக பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

ஆசிரியர் - Admin
மகா கும்பமேளாவில் நீராடியதாக போலி புகைப்படம்: காட்டமாக பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

மகா கும்பமேளாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் புனித நீராடியதாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து அவர் பதில் அளித்துள்ளார். இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.     

இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு புனித நீராடும் வகையிலான போலி புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "போலி செய்திகளை பரப்புவதுதான் மத வெறியர்கள், கோழைகளின் கடைசி வழி ஆகும்.

அவர்களின் புனித விழாவின் போது கூட போலி செய்திகளை பரப்புகிறார்கள். இது வெட்கக்கேடான செயல். போலி புகைப்படத்தை பரப்பியவர்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள்" என்று கூறியுள்ளார்.