குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் 2025- 2027 தொடர்பான கருத்தரங்கு
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் 2025- 2027 தொடர்பான கருத்தரங்கு
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் 2025- 2027 தொடர்பான கருத்தரங்கு இன்று (8) மருதமுனை கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது.
சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு சமூக வலுவூட்டல் அமைச்சு ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்கு கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் எ. ஆர். எம். சாலிஹ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது கல்முனை பதில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம். அன்சார் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த கருத்தரங்கு தொடர்பிலான சிறப்புரை ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.தொடர்ந்து குறித்த கருத்தரங்கில் வளவாளராக சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளரும் மகாசங்க முகாமையாளரும் மாவட்ட வளவாளருமான என்.எம்.நௌசாத் கலந்து கொண்டு பல்வேறு விளக்கங்களை வழங்கி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக வலுவூட்டல் எனும் தொனிப்பொருளில் இக்கருத்தரங்கு மேற்கொள்ளப்படுவதுடன் அஸ்வெசும மற்றும் குறைந்த வருமானம் பெறும் பயனாளிக் குடும்பங்களை பலப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தில் மக்களின் வறுமையை ஒழிக்க சகல உத்தியோகத்தர்களும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் கே.எம்.உதார, சமூர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ்.ரஞ்சன், சமூர்த்தி வங்கி முகாமையாளர்களான எஸ்.எஸ்.பரீரா, யு.கே.சிறாஜ், போதைப்பொருள் தடுப்பு மற்றும் புனர்வாழ்வு அபிவிருத்தி உத்தியோகத்தர் றாசிக் நபாயிஸ், சமூர்த்தி சந்தைப்படுத்தல் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.சனூபா, சமூர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். பாத்திமா சிப்றா உட்பட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேச செயலக 52 வகையான உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.