உள்ளூராட்சி தேர்தலுக்கான பழைய வேட்புமனுக்களை இரத்துச் செய்ய தீர்மானம்...
2023ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இதேவேளை, புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு அனுமதிக்கும் வகையில் உள்ளூராட்சி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.