SuperTopAds

அஷ்ரப் சேரின் படமும் ஆதவன் பாட்டும் இனி எடுபடாது -முகமது ரஸ்மின்

ஆசிரியர் - Editor III
அஷ்ரப் சேரின் படமும் ஆதவன் பாட்டும் இனி எடுபடாது -முகமது ரஸ்மின்

அஷ்ரப் சேரின் படமும் ஆதவன் பாட்டும் இனி எடுபடாது -முகமது ரஸ்மின்

சமூகத்துக்கு அசிங்கத்தை அளித்தவர்கள் இஸ்லாமிய தலைவர்கள் !
ஜனாஸா எரிப்புக்கு துணைபோன இவர்கள் துரோகிகள் !
ஹக்கீம் 20 வருடம் எம்பியாயிருந்து சாதித்தது என்ன?
அறுகம்பை சம்பவத்திற்கு யாருமே வாய் திறக்காதது ஏன்?
அஷ்ரப் சேரின் படமும் ஆதவன் பாட்டும் இனி எடுபடாது !
சமூகத்திற்கு உதவி செய்ய விரும்பினால் தேர்தலில் இருந்து விலகுங்கள் !- we are One அமைப்பின் செயற்பாட்டாளர்  முகம்மட்  ரஸ்மின்
  

ஹரீஸ் எம்பி 20 க்கு கை தூக்கிய காரணத்தினால் இம் முறை வேட்பாளர் வழங்கப்படவில்லை. சரி, அப்படி என்றால், பைசல் காசிம் என்ன 200 க்கா
கை தூக்கியவர் ? அவருக்கு எப்படி சீற் வழங்கியது?

இவ்வாறு கேள்வி எழுப்புகிறார் நல்லாட்சி தேசிய முன்னணியின் ஆதரவு “வி ஆ வண்”( we are one) அமைப்பின் இணைப்பாளர்  முகம்மட்  ரஸ்மின்

அம்பாறை ஊடக மையத்தில்  எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு சமகால அரசியல் தொடர்பாக    நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் ஆக்ரோசமாக மேலும் தெரிவிக்கையில்…

நாட்டில் தமிழ் பேசும் சமூகங்கள் பல பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றது. இதுவரை இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அவற்றுக்கு எந்த தீர்வையும் காணவில்லை. அரசியலுக்காக பிச்சைக்காரனின் புண் போல அதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டிற்கு தரமான தலைவர் அனுர கிடைத்துள்ளார்.நாட்டுக்கு தேவையான நல்ல தலைவரை தேர்வு செய்யுங்கள் என்று அன்று அவர் கூறினார்.இப்பொழுது கூறுகிறார் உங்களுக்கு தேவையான உங்கள் தலைவர்களை தேர்வு செய்யுங்கள் என்று.அதுதான் உண்மை .
இப்பொழுது பாராளுமன்றத் தேர்தல் வந்திருக்கிறது. எமக்கு தேவை உண்மையாக தலைவர்கள்.


அறுகம்பை சம்பவத்திற்கு இதுவரை யாருமே வாய் திறக்காதது ஏன்? பொத்துவிலில் உள்ள முஷாரப்பே வாய் திறக்கவில்லை.
என்ன அனுரவிற்கு பயந்து நிற்கிறீர்களா? அல்லது தமது இருப்பு கேள்விக் குறியாக போகும் என்று நினைக்கிறீர்களா?
இவர்களா தலைவர்கள்?கடந்த காலங்களில் எமது தலைவர்களாக இருந்தவர்கள் என்ன செய்தார்கள் என்பதை உலகறியும். தயவுசெய்து சமூகத்துக்கு உதவி செய்ய வேண்டுமாக இருந்தால் இந்த போட்டியில் இருந்து ஒதுங்கி கொள்வது நல்லது .புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

சமூகத்துக்கு முழுக்க முழுக்க அசிங்கத்தை அள்ளித்தந்தவர்கள் எமது இஸ்லாமிய தலைவர்கள் .ஜனாஸா எரிப்புக்கு துணை போன இவர்கள் இனத்துரோகிகள் .
ஹக்கீம் 20 வருட காலம் எம்பியாக இருந்து சாதித்ததென்ன?20க்கு கை தூக்கியதன் பலன் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன. அப்போது காபிஸ் நசீர் சொன்னார் 150 பெட்டிகளை எரிக்கப்பட்டன ஜனாஸா இல்லை என்று.அதனையும் ஹக்கீம் கைகட்டிபார்த்துக் கொண்டிருந்தார். மன்னிக்க முடியாது .


ஈஸ்டர் தாக்குதலில் 2500 இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். தலதா மாளிகை முன்பாக பௌத்தப்பிக்குமார் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதனை அடுத்து முஸ்லிம் எம்பிக்கள் பதவி பதவி விலகினார்கள். ஆனால், வெறும் 13 நாட்களின் பின்னர் மீண்டும் பதவியேற்றார்கள்.
எப்படி இவர்களின் நாடகம்?அவர்களுக்கு அரசியல் அதிகாரம் என்பது சேட் போடுவது மாதிரி. சரி இந்த அதிகாரத்தை வைத்து சமூகத்துக்கு என்ன செய்தார்கள். ?
திகன கலவரம் அழுத்கம கலவரம் அக்குரனை கலவரம் நீதி கிடைத்ததா? இல்லை. ஒரு வெள்ள பாதுகாப்பை தானும் ஏற்படுத்த முடிந்ததா? இல்லை .
மேடைகளில் குர்ஆன் ஹதீஸ் முழங்குகிறார்கள் . வெட்கமா இல்ல.

மக்களே இனம் கண்டு இவர்களை விரட்ட வேண்டும் .ஹக்கீம் என்றாவது சமூகத்துக்காக எங்காவது கோட்போட்டு நீதிமன்ற போனாரா? இல்லை.
பிஎவ்எஸ் ரணில் போன்றோருக்கு ஆதரவாக மட்டுமே கோட் ஏறினார். அம்பாறை திகன அளுத்கம வேருவல இப்படி முஸ்லிம் சமூகத்துக்காக கோட் ஏறினாரா? இல்லை .

இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. இவர்களை நார் நாராய் கிழித்து தொங்கவிடுவோம்.முகா சொல்கிறது ஒன்பது இடங்களில் வெல்வோம் என்று.மயில் சொல்கிறது பத்து இடங்களில் வெல்வோம் என்று .முதலில் முடிந்தால் உங்கள சொந்த ஆசனத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் பார்க்கலாம் .

எமது நல்லாட்சி தேசிய முன்னணியில் பணம் இல்லை பதவியில்லை.வாகனமில்லை. லஞ்சம் இல்லை ஊழல் இல்லை.
நாங்கள் இன்று கொழும்பிலிருந்து எங்கட காசில் வந்திருக்கிறோம் எங்கட பணத்தில் தான் பேசிக் கொண்டிருக்கின்றோம் பயணம் செய்கின்றோம்.
ஆனால் எங்களிடம் இருப்பதெல்லாம் உண்மை நேர்மை.

தேசிய ரீதியிலே மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அதேபோல் பிராந்தி ரீதியிலும் அத்தகைய மாற்றம் தேவை. எனவே இந்த பழைய ஏமாற்றுப் பேர்வழிகள் இனத் துரோகிகள் அனைவரையும் துரத்தியடித்து புதிய நல்ல முகங்களைத் தேர்ந்து ஊழலற்ற அரசாங்கத்தை ஏற்படுத்த மக்களே நீங்கள் உதவி செய்ய வேண்டும். என்றார்.



--