மக்களுக்கு கௌரவமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கம் – செயலாளர் நாயகம் டக்ளஸ்!

குடியேற்ற திட்டங்களை ஆரம்பிக்கும் போது நமது மக்களுக்கு ஒரு வளமான வாழ்க்கையை அல்லது கௌரவமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே தனது நோக்கமாக இருந்ததாக தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வெறும் தேர்தலை நோக்கமாகக் கொண்டு தான் ஒருபோதும் சிந்தித்ததில்லை எனவும் தெரிவித்தார்.
வவுனியா தெற்கு சுந்தரபுரம் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வேளையே அவர் இதனை தெரவித்தார்.
மேலும், ஈ.பி.டி பி. தவிர்ந்ந தமிழ் தரப்புக்கள் சுயநலன்களுக்காக தமிழ் மக்களின் அபிலாசைகளையும் பிரச்சினைகளையும் கையாள்வதாகவும் குற்றஞ்சாட்டிய அவர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கணிசமான வாக்குகளை வீணைக்கு வழங்கிதரும்பட்சத்தில், மக்கள் ஆணையை பயன்படுத்தி மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்தார்.