கங்குவா எனக்கு எழுதப்பட்ட கதை: போட்டுடைத்த டாப் நடிகர்!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து இருக்கும் படம் கங்குவா. அடுத்த மாதம் இந்த படம் ரிலீஸ் ஆவதால் ப்ரோமோஷன் பணிகளை தற்போதே படக்குழு தொடங்கி இருக்கிறது.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படம் பற்றிய முக்கிய தகவலை ரஜினி தெரிவித்து இருக்கிறார்.
அண்ணாத்தே பட ஷுட்ட்டிங் நேரத்திலேயே எனக்காக ஒரு வரலாற்று படம் எழுதுங்கள் என சிவாவிடம் கேட்டாராம் ரஜினி. அந்த கதையை தான் சூர்யாவுக்காக சிவா சில மாற்றங்கள் செய்து கங்குவா என்கிற பெயரில் படமாக்கி இருக்கிறார் என ரஜினி தெரிவித்து இருக்கிறார்.