SuperTopAds

மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் அஷ்ரப் தாஹிரை ஆதரித்து கருத்தரங்கு-அலுவலகமும் திறப்பு

ஆசிரியர் - Editor III
மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் அஷ்ரப் தாஹிரை ஆதரித்து கருத்தரங்கு-அலுவலகமும் திறப்பு

பாராளுமன்ற தேர்தல் வேட்பாளரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் தவிசாளருமான அஷ்ரப் தாஹிரை  ஆதரித்து நிந்தவூர் பிரதான வீதியில் கட்சியின் மாவட்ட தேர்தல் பணிமனை   திறந்து வைக்கப்பட்டதுடன் தேர்தல் பிரசாரமும் சிறப்பாக இன்று இரவு நடைபெற்றது.

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிந்தவூர் மத்திய குழு  ஏற்பாட்டில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு துரோகம் செய்த எவரும் அரசியலில் நிலைக்கப்போவதில்லை, இம்முறை பொதுத் தேர்தல் முடிவுகள் இதனை உண்மைப்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட வேட்பாளர் அஷ்ரப் தாஹிரை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,


எமது வேட்பாளர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு உழைத்தால், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு  எம்.பி.க்களை வெல்ல முடியும்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு துரோகம் செய்த எவரும் அரசியலில் நிலைக்கப்போவதில்லை, இம்முறை பொதுத் தேர்தல் முடிவுகள் இதனை உண்மைப்படுத்தும்.அம்பாறை மாவட்டத்தில் இன ஒற்றுமை அவசியம் பேணப்படல் வேண்டும். விஷேடமாக தமிழ் மக்களுடன் நல்லுறவைக் கட்டியெழுப்புங்கள். மூவினத்தவரையும் அரவணைத்துச் செல்லும் கட்சியே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். இங்குதான் அரசியல் ஆளுமைகள் வளர்க்கப்படுகின்றன. மக்களின் அமானிதமே எங்களுக்கு முக்கியம். இதனால், இம்முறை போட்டியிடும் சகல வேட்பாளர்களிடமும் உறுதியான சத்தியக்கடதாசி வாங்கியுள்ளோம். சமூகத்துக்கு துரோகமிழைப்போர், அரசியலில் நிலைத்ததாக வரலாறே இல்லை” என்று கூறினார்.

இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான றியாஸ் ஆதம்  நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அஸ்பர்  நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் றியாட்  நிந்தவூர் பிரதேச பிரதேச இளைஞர் அமைப்பின் கொள்கைபரப்பு செயலாளர் ஜுசைல்  ஆகியோர் கலந்த கொண்டனர்.