SuperTopAds

குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையான நாமல் ராஜபக்ஸ..

ஆசிரியர் - Editor I
குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையான நாமல் ராஜபக்ஸ..

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (24) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கேள்வி - ஏன் திடீரென்று அழைக்கப்பட்டுள்ளீர்கள்?

"எனக்குத் தெரியாது. நானே போய்ப் பார்க்க வேண்டும்."

கேள்வி - விடயம் தெரியாதா?

"எனக்கு விடயம் தெரியாது. அழைப்பது நல்லது. நம்மிடம் இருக்கும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட ஒரே வழி இதற்கு வர வேண்டும். 

ஏனென்றால் தெரிந்தே பொய் சொல்பவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் தெரிந்து பொய் சொல்பவர்கள் அல்ல. நாங்கள் பொறுப்போடு பதில் வழங்கிவிட்டு வருபவர்கள்."