பாராளுமன்றத்திற்கான அதிகாரத்தை மக்கள் வழங்கினால் அனைத்திற்கும் தீர்வு பெற்றுத் தருவேன்

ஆசிரியர் - Editor III
பாராளுமன்றத்திற்கான அதிகாரத்தை மக்கள் வழங்கினால் அனைத்திற்கும் தீர்வு பெற்றுத் தருவேன்

பாராளுமன்றத்திற்கான அதிகாரத்தை மக்கள் வழங்கினால் கல்முனையின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு பெற்றுத் தருவேன்

-முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப்-

நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் எனது மக்கள் பாராளுமன்றத்திற்கான ஆணையை எனக்கு வழங்குகின்ற போது அம்பாறை மாவட்டத்தின் குறிப்பாக கல்முனை மாநகரின் தீர்க்க முடியாமல் பல வருடகாலமாக தேங்கிக் கிடக்கின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுத்தருவேன் என சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசத்தின் மாளிகா மனிதநேய அமைப்ப ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களுக்கான பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் முன்னாள் மாநகரசபை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையிற்றுகையில் :-

கல்முனைத் தொகுதி என்பது கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசம் ஆகும். இந்தத்தொகுதி மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்திய பாரம்பரியமிக்க தொகுதி ஆகும். தலைவரின் மறைவிற்குப் பின்னர் கல்முனைத் தொகுதியில் இருந்து மக்களால் மிகுந்த எதிர்பார்ப்புடன் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இதுவரையில் எந்தவொரு ஆக்கபூர்வமான செயற்பாட்டையும் செய்யவில்லை என்பது வெளிப்படை. அதனால்தான் மக்கள் அந்தப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை எதிர்த்து கட்சித் தலைமையினதும் மனக்களினதும் ஏகோபித்த முடிவின்படி என்னையும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக  இத்தேரிதலில் போட்டியிடுமாறு வேண்டிக்கொண்டுள்ளார்கள்.

கடந்த 2011 ஒக்டோபரில் நான் மாநகரசபை மேயராக பதவியேற்றதிலிருந்து துடிப்புடன் இந்த மாநகரசபை எல்லைக்குட்பட்ட மக்களின் தேவைகளை அறிந்து எவ்வாறு சேவைகள் செய்தேன் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அதேபோல் இன்னும்பல சேவைகளை நான் செய்ய வேண்டுமென்று என்னுள் பல திட்டங்களை நான் வகுத்திருக்கின்றேன். அதற்கான அரசியல் அதிகாரத்தை நோக்கிய ஒரு பயணமாகவே நான் எனது அரசியல் இருப்புக்களை ஏற்படுத்திக்கொண்டேன். கடைசியில் இறைவன் இப்படி ஒருவாய்ப்பை முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக எனக்குத் தந்திருக்கின்றான்.

இந்த வேளையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலே அம்பாரை மாவட்டத்திலிருக்கின்ற அனைத்து ஆதரவாளர்களும் எனக்கு வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்வதன் மூலம் ஒரு எழுச்சிமிக்க அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க ஒற்றுமையுடன் செயற்படுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு