SuperTopAds

வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் நிறைவு-அம்பாறை மாவட்டம்

ஆசிரியர் - Editor III
வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் நிறைவு-அம்பாறை மாவட்டம்

இலங்கையின் 9 ஆவது   ஜனாதிபயை தெரிவு செய்வதற்காக நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக அம்பாறை  மாவட்ட வாக்கு  எண்ணும் நிலையமான அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில்   இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்  528  வாக்களிப்பு நிலையங்களில் 555,432  பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில்  பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகின்றன.அதன்படி அம்பாறை 188222 பேர், சம்மாந்துறை 99727 பேர், கல்முனை 82830 பேர், பொத்துவில் தொகுதியில் 184653 பேர் ஆகும்.அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள் 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள்  74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


 இதேவேளை  தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 அத்துடன் தேர்தல் தினத்தில் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிசார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனைய தரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளது.


அம்பாறை  மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக  மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான  சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.வாக்களிப்பு நிலையத்தில் செப்டம்பர் 21ம் திகதி காலை 07 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்படும். பிற்பகல் 04 மணிக்கு வாக்களிப்பு நிலைய வரிசையில் தரித்து நிற்கின்ற வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை பிற்பகல் 04 மணிக்கு பின்னர் வாக்களிப்பு நிலையத்தினுள் உட்பிரவேசிக்க இடமளிக்க முடியாது அவர் மேலும் தெரிவித்தார்.