SuperTopAds

மாம்பழ உற்பத்தியில் இரண்டாம் கட்டம் வெற்றி-மாணவர்களை பாராட்டிய அதிபர்

ஆசிரியர் - Editor III
மாம்பழ உற்பத்தியில் இரண்டாம் கட்டம் வெற்றி-மாணவர்களை பாராட்டிய அதிபர்

மாம்பழ உற்பத்தியில் இரண்டாம் கட்டம் வெற்றி-மாணவர்களை பாராட்டிய அதிபர்

மாம்பழ அறுவடை இரண்டாம் கட்டமாக வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் நல்லொழுக்கம் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவமும் தான் காரணம் என கல்முனை   அஸ்-ஸுஹறா  வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தெரிவித்தார்.

கல்முனை  கமு/கமு/அஸ்-ஸுஹறா  வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு   இன்று  பாடசாலை அதிபர் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில் இரண்டாம் கட்டமாக சிறப்பாக பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ் சஹுதுல் நஜீம் ,  கௌரவ அதிதியாக  வலய  கணக்காளர் வை . எம். ஹபிபுல்லாஹ்,  பாடசாலை ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் கலந்து  சிறப்பித்தனர்.

இதன்போது சுமார் 100க்கும் அதிகமாக மாம்பழங்கள் அறுவடை என்பது    மாணவர்களின் நல்லொழுக்கம் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவமும் தான் காரணம்   மாணவர்களின் சுற்றாடல் சார் நடவடிக்கைகள் இந்த அறுவடை செயற்பாட்டில் தங்கி இருந்தள்ளது. ஒழுக்கம் உள்ள இடத்தில் தான் காய் கனிகள் பாதுகாப்பாக இருக்கும்  என அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா குறிப்பிட்டார்.

மேலும் இப்பாடசாலையில் கடந்த 04.10.2023  அன்று முதல் கட்ட அறுவடை இடம்பெற்றிருந்ததுடன் இம்முறை இரண்டாம் கட்டத்தில்  சுமார் 100க்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி  மாம்பழ இனங்கள் அதிதிகளால் உத்தியோகபூர்வமாக வெட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.