கடற்கரை வீதி புனரமைப்பு இடைநிறுத்தம்-மக்கள் போராட்டம்

ஆசிரியர் - Editor III
கடற்கரை வீதி புனரமைப்பு இடைநிறுத்தம்-மக்கள் போராட்டம்

கடற்கரை வீதி புனரமைப்பு இடைநிறுத்தம்-மக்கள் போராட்டம்

கல்முனை- மருதமுனை கடற்கரை வீதி அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தம்-மக்கள் போராட்டம்

கல்முனை தொடக்கம் மருதமுனை வரையிலான கடற்கரை வீதி காபட் வீதியாக புனரமைப்பு செய்யும் ஆரம்ப வேலைத்திட்டம் ஆரம்பமாகி சீராக இடம்பெற்று வந்தது.

எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த வீதியின் கல்முனை விஷ்ணு கோவில் தொடக்கம் கல்முனை மாமாங்க பிள்ளையார் கோவில் வரையான  சுமார் 700 மீற்றர் தூரம் போடப்படாமல் கைவிடப்பட்டு பின்னர் எஞ்சிய பகுதிகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

இதனை தொடர்ந்து கைவிடப்பட்ட வீதியின் அருகில் வாழும் பொதுமக்கள் இன்று(11) போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கைவிடப்பட்ட வீதியினை நிறைவு செய்து தருமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

மேலும் குறித்த வீதிக்கு அருகில் உள்ள விளையாட்டு மைதான எல்லை பிரச்சினை ஒன்று காணப்படுவதாகவும் அதனால் இவ்வீதி கைவிடப்பட்டு எஞ்சிய வீதிகள் புனரமைக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

குறித்த வீதிகள் போடப்படாமல் கைவிடப்படுவதற்கு காரணம் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பின்னணியில் செயற்படுவதாக  மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு