முடிந்தளவு விரைவாக உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்தவேண்டும்! உயர் நீதிமன்றம் உத்தரவு..
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் 2023 இல் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முடிந்தளவு விரைவில் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறும் இன்று வியாழக்கிழமை (22) உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமையால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.