காணாமல்போன 3 மாணவிகள் காலியில் உள்ள விடுதி ஒன்றிலிருந்து பொலிஸாரால் மீட்பு!
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேட்வெஸ்டர்ன் தோட்டத்தின் லூசா பிரிவில் கடந்த மாதம் (14) முதல் காணாமல்போயிருந்த மூன்று பாடசாலை மாணவிகளும் மாணவியும் காலி மீட்டியாகொடை பகுதியில் உள்ள தங்குமிட விடுதியொன்றில் இருந்து நேற்று (04) பொலிஸாரால் பொறுப்பேறக்கப்பட்டதாக தலவாக்கலை தலைமை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இவர்கள் நால்வரும் மீட்டியகொடை பிரதேசத்தில் உள்ள கறுவாப் பட்டை பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்குச் சென்றுள்ளதாகவும், மாணவர்கள் 14 மற்றும் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் தொழிற்சாலையின் கட்டுப்பாட்டு அதிகார சபை அவர்களை வேலைக்கு அமர்த்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போன நான்கு மாணவர்களின் உறவினர் ஒருவர் இலவங்கப்பட்டை தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதால், அவரைக் தேடி இவர்கள் அந்த தொழிற்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், வேலை கிடைக்காததால் நால்வரும் சுமார் ஒரு மாதமாக தொழிற்சாலைக்கு சொந்தமான தங்குமிட விடுதியில் தங்கியுள்ளனர்.
தலவாக்கலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று, அவர்களிடம் இருந்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டதன் மூலம் மூன்று மாணவிகள் மற்றும் மாணவர்களின் மறைவிடத்தை அடையாளம் காண முடிந்ததுள்ளது. அதன்படி, நான்கு பேரும் நுவரெலியா நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்தப்பட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். வீட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று மாணவர்களும் மாணவியும் வீட்டை விட்டு ஓடியதாக அத்தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.