SuperTopAds

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த நபருக்கு 13 வருட கடூழிய சிறை..

ஆசிரியர் - Editor I
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த நபருக்கு 13 வருட கடூழிய சிறை..

கிளிநொச்சி பகுதியில் 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தலைமறைவாகியிருந்த நபருக்கு 13 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இந்த நபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

இக்குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

எனினும், இந்த நபர் இதுவரை தலைமறைவாகியிருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (25) கைது செய்யப்பட்டு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்தே தண்டனை தொடர்பாக அறிவிக்கப்பட்டது.