முப்படை அதிகாரிகள், ஊடகவியலாளர்களுக்கு கெளரவிப்பு நிகழ்வு
எக்ஸத் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில், இலங்கையின் முப்படைகளில் சேவையற்றி ஓய்வு நிலையில் உள்ளவர்களுக்கும், தற்போது சேவையாற்றிக் கொண்டிருப்பவர்களும் அதனோடு இணைந்ததாக இரண்டு சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் நான்கு சிவில் செயற்பாட்டாளர்களுக்கும் கெளரவம் வழங்கப்படவுள்ளன.
மேற்படி கெளரவிப்பு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (27) 3.30 மணிக்கு காத்தாான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரி அப்துல் ஜவாத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஜெ.எல்.எம்.ஷாஜஹான் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கரையோர பிரதேச ஒருங்கிணப்பு குழுத் தலைவருமான கெளரவ சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் கெளரவ அதிதிகளாக
சிரேஸ்ட பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் ,தென்கிழக்கு பல்கலைக்கழகம் பேராசிரியர் எம்.எம். பாஸில் ,பேராசிரியர்-கலாநிதி எம்.பி.எம்.இஸ்மாயில் ,பேராசிரியர்.கலாநிதி ஐ.எல்.எம்.மாஹிர் ஆகியோரும். விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ரி. அன்சார் நளீமி , கலாநிதி எஸ்.எம்.எம். நபீஸ் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களும் இன்னும் பல கல்விமான்களும், ஊர்த்தலைவர்களும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டு
சிறப்பிக்கவுள்ளனர்.