தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிப் பிரதிநிதிகள் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்

ஆசிரியர் - Editor III
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிப் பிரதிநிதிகள் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்

அம்பாறை மாவட்டத்தின் அரசியல் ஸ்தரத்தன்மை காரணமாக மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிப் பிரதிநிதிகள் தினந்தோறும் அம்மாவட்ட மக்களை சுழற்சி முறையில் சந்தித்து வருகின்றனர்.

அக்கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் (பிள்ளையான்) வழிநடத்தலில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அக்கட்சியின் முக்கியஸ்தருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தனின் நெறிப்படுத்தலில் இச்சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றன.

இரவு பகல் என்று பாராமல் இக்கட்சி முக்கியஸ்தர்கள் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பாண்டிருப்பு பெரிய நீலாவணை அண்ணமலை வேப்பையடி மத்திய முகாம் வீரமுனை மல்வத்தை சம்மாந்துறை நிந்தவூர் அக்கரைப்பற்று திருக்கோவில் ஆலையடிவேம்பு கோமாரி காரைதீவு தம்பட்டை தம்பிலுவில் கோளாவில் கஞ்சிக்குடிச்சாறு ரொட்டை இன்ஸ்பெக்டர் ஏற்றம் பானமை பொத்துவில் சின்ன உல்லை உட்பட  பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்து மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து  எதிர்கால தேர்தல் நடவடிக்கைக்கான வியூகங்களை மேற்கொண்டுள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக த.ம.பி.பு.கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரக்காந்தன் அம்பாறை மாவட்டத்திற்கு சென்று அங்கு வாழ்கின்ற தமிழ் மக்களிடம் கருத்துக்களை கேட்பதும் அதனை தொடர்ந்து அம்பாறை மாவட்ட பிரதிநிதித்துவத்தை பூரணமாக பெற்றுக்கொள்வதற்கு எந்தவொரு தரப்பினருடன் நிபந்தனையுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளதாக குறிப்பிட்டு வருகின்றார்.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இவ்விடயத்தில் கருத்து வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைந்து செயற்பட பொதுவெளியில்  அழைப்பு கூட விடுத்திருந்தார்.இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் முகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினர் தவராசா கலையரசன் அழைப்பினை நிராகரித்து அநாகரீகமான முறையில் சில கூட்ட மேடைகளில் பேசியிருந்தார்.இதனை அம்பாறை மாவட்ட மக்கள் சமூக வலைத்தளங்களில் கண்டித்திருந்தனர்.

இது ஒரு புறமிருக்க  தற்போது அம்பாறை மாவட்ட மக்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் அதன் தலைவருடன்  ஒரு  இறுக்கமான பிணைப்பு ஒன்றினை மேற்கொண்டு வருகின்றார்கள்.இதற்கு இக்கட்சி மேற்கொள்ளும் மக்கள் சந்திப்புக்கள் சான்று பகிர்கின்றன.இவ்வாறு இக்கட்சியினை பொதுமக்கள்  பலப்படுத்துவதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது அழிந்து செல்லும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு