“நல்லுறவை வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம்” - சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு..

ஆசிரியர் - Editor I
“நல்லுறவை வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம்” - சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு..

ஆந்திர பிரதேச முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை டெல்லி விமான நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இன்று (ஜூன் 5) மாலை இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்த கூட்டம் முடிந்து திரும்பி வரும்போது டெல்லி விமான நிலையத்தில் ஆந்திர பிரதேச முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “டெல்லி விமான நிலையத்தில், கருணாநிதியின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்தேன்.

அவருக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, சகோதர மாநிலங்களான தமிழ்நாடு - ஆந்திர பிரதேசம் இடையேயான நல்லுறவை வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம் என்ற என் நம்பிக்கையை வெளிப்படுத்தினேன்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு