மோடியின் வெற்றி - யாழ்ப்பாணத்தில் வைரவருக்கு தேங்காய் உடைத்து கொண்டாடிய சிவசேனை!

ஆசிரியர் - Admin
மோடியின் வெற்றி - யாழ்ப்பாணத்தில் வைரவருக்கு தேங்காய் உடைத்து கொண்டாடிய சிவசேனை!

இந்தியாவில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 

இந்த வெற்றியை இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகள் இணைந்து யாழ்ப்பாண நகரில் நேற்று மாலை கொண்டாடின.     

யாழ். நகரிலுள்ள வைரவர் ஆலயத்துக்கு முன்பாக இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.கற்பூரம் கொழுத்தப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டன.

 பின்னர் பொதுமக்களுக்கு மோதகம், லட்டு ஆகியன பரிமாறப்பட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசு கொழுத்தியும் வெற்றியைக் கொண்டாடினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு