40 ஆசனங்களையும் தட்டித் துாக்கியது தி.மு.க! அ.தி.மு.க/ நாம் தமிழர் வெறுங்கையுடன்..

ஆசிரியர் - Editor I
40 ஆசனங்களையும் தட்டித் துாக்கியது தி.மு.க! அ.தி.மு.க/ நாம் தமிழர் வெறுங்கையுடன்..

தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி தொடங்கி எண்ணப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணியை வாஷ் அவுட் செய்து 40 இடங்களையும் திமுக கூட்டணியே வென்றுள்ளது. 

இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியிலும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தாரகை வெற்றி பெற்றுள்ளார்.

மிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகள் கொண்ட இந்த மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக தலைமையில் ஓர் அணி, 

பாஜக தலைமையில் ஓர் அணி, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என 4 முனைப் போட்டியுடன் தேர்தல் களம் சூடுபிடித்த நிலையில் மற்ற தென் மாநிலங்களில் பாஜகவின் வீச்சு பெரிய அளவில் இருக்க

 தமிழகத்தில் மட்டும் பாஜகவை கணக்கைத் தொடங்கவிடாமல் கட்டுப்படுத்தியுள்ளது திமுக கூட்டணி.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு