தேர்தலைப் பிற்போடுவது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமல்ல!

ஆசிரியர் - Admin
தேர்தலைப் பிற்போடுவது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமல்ல!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்றும் பாராளுமன்றத்தின் ஆணையை நீடித்துக் கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் முன்மொழிவு அடிப்படைக் கொள்கைகளைக் கேள்விக்குட்படுத்துமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.     

தேர்தல்களை ஒத்தி வைப்பது எந்தவொரு ஜனநாயகத்துக்கும் ஆரோக்கியமானதல்லதெனத் தெரிவித்த நாமல், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பதானது ஜனநாயக சமூகத்தின் அடிப்படைக் கொள்கைகளை கேள்விக்குட்ப்படுத்துகிறதெனவும், உறுதித்தன்மையானது மக்களின் ஆணையால் வரவேண்டும் என்றும் அவர்களின் குரலைத் தாமதப்படுத்தவதால் அல்ல எனக் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு