தேர்தலைப் பிற்போட முடியாது! - ஐக்கிய மக்கள் சக்தி.

ஆசிரியர் - Admin
தேர்தலைப் பிற்போட முடியாது! - ஐக்கிய மக்கள் சக்தி.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது. ஜனாதிபதி தேர்தலுக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கீன்ஸ் நெல்சன் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார அரசியலமைப்புச் சட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமலே இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார்.

இந்த கதையை நாட்டுக்கு கூறும் முன், அரசியலமைப்பின் எந்தப் பிரிவு இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை பாலித ரங்கே பண்டார முதலில் சுட்டிக்காட்ட வேண்டும். இவ்வாறான பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி, அரசியலமைப்பைப் பாதுகாப்பேன் என உறுதி மொழி வழங்குகிறார். பாலித ரங்கே பண்டார அரசியலமைப்பை மீறும் செயலையே மேற்கொள்கிறார். ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் 2 வருடங்களுக்கு ஒத்திவைக்க அல்லது பதவிக் காலத்தை நீடிக்க பிரேரணைகள் கொண்டு வரப்பட்டால் அந்த பிரேரணைகளை நிச்சயமாக தோற்கடிப்போம் என்றார்.

பொதுத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசியலமைப்பில் ஏற்பாடுகள் இருந்தாலும், ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பில் அரசியலமைப்பில் எந்த ஏற்பாடும் இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்றை எவ்வாறு பாராளுமன்றத்திற்குக் கொண்டுவருவது என்பதில் சிக்கல் எழுந்துள்ளது என்றார்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு