SuperTopAds

மன்னார் தீவு காற்றாலை அமைக்கப் பொருத்தமான இடம் அல்ல!

ஆசிரியர் - Admin
மன்னார் தீவு காற்றாலை அமைக்கப் பொருத்தமான இடம் அல்ல!

யங்களை வைத்தும் காற்றாலையினை மன்னார் தீவுடன் சேர்ந்து அமைப்பது மன்னார் தீவுக்கு பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது புலனாகின்றது.

காற்றாலை மின்சாரம் அமைக்கலாம்.ஆனால் அதற்கான உகந்த இடங்களை தெரிவு செய்து முன்னெடுக்க வேண்டும்.ஆனால் மன்னார் தீவு என்பது கடல் மட்டத்தில் இருந்து சற்று குறைவான இடத்திலே காணப்படுகின்றது.இத் தீவு இச்செயல் திட்டத்திற்கு பொருத்தமானதாக இல்லை என்பது இங்கு வாழும் அனைவரதும் நிலைப்பாடு.இவை சரியான முறையில் ஆராய்ந்து இச் செயல்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இதனால் பல வித பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என்பது தெரிய வருகிறது.

எனவே இத்திட்டங்களை நிறுத்துவதற்கும்,ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டத்தில் ஏற்பட்டுள்ள பின் விளைவுகள் மற்றும் பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் சில மாற்று வழிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இவ் விடயங்களை உடனடியாக கவனத்தில் எடுப்போம்.இவ்விடயம் தொடர்பாக ஏற்கனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்று நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதனடிப்படையில் மன்னாரில் இருந்து மக்கள் சார்பாகவும் இவ்வாறான ஒரு செயல் திட்டத்தை அவர்களுடன் இணைந்து முன்னெடுப்பதற்கு நாங்கள் எதிர்வரும் வாரம் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்.

மன்னாரில் உள்ள பல ஏக்கர் தனியார் காணிகளும் அபகரிக்கப்பட்டு அதனைச் சுற்றி வேலி அடைத்து பல செயல் திட்டம் அமுல் படுத்தப்பட்டு வருகிறது- என அவர் மேலும் தெரிவித்தார்.