உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு நடைபவனியுடன் விழிப்பூட்டல் கருத்தரங்கு

ஆசிரியர் - Editor III
உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு நடைபவனியுடன் விழிப்பூட்டல் கருத்தரங்கு

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய மார்பு சிகிச்சைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனியும் விழிப்பூட்டல் கருத்தரங்கும் சனிக்கிழமை (23)  அம்பாறை மாவட்டம்  சாய்ந்தமருது பகுதியில்  இடம்பெற்றது.

"ஆம் எம்மால் காச நோயை இல்லாதொழிக்க முடியும்" எனும் தொனிப்பொருளில் பிராந்திய மார்பு சிகிச்சைப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர்.ஏ.எல்.அப்துல் கபூர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சி.எம்  மாஹிர் மலேரியா தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் .எம் எம் நௌஷாத் ஆயுர்வேத பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர்  எம் ஏ நபீல் பாலியல் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஐ.எல்.  ஜலால்தீன் உள்ளிட்ட பிரிவு தலைவர்களும் சாய்ந்தமருது பிரதேச வைத்திய சாலையின் பிரதேச வைத்திய அதிகாரி உள்ளிட்ட வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து கொண்டனர். 


மேலும் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக ஆரம்பித்த நடைபவனி சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வரை சென்றதுடன் அவ்வைத்தியசாலையில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றும்  இடம்பெற்றது. இதன்போது காசநோய் தொடர் பாகவும் அந்நோய்க்கான அறிகுறிகள், அந்நோயிலிருந்து பாதுகாப்பு பெறுதல், சமூகத்தில் காசநோயை கட்டுப்படுத்த முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர் பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.


உலக காசநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24ஆம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வரப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு