ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் ரசிகர்களின் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஐபிஎல் 17ஆவது அத்தியாயம் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் ரசிகர்களின் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஐபிஎல் 17ஆவது அத்தியாயம் ஆரம்பம்..

இண்டியன் பிறீமியர் லீக் 17ஆவது அத்தியாயம் சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் நடைபெற்ற கண்கவர் தொடக்க விழாவுடன் பிரமாண்டமாக ஆரம்பமானது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.30க்கு தொடங்கிய ஆரம்ப விழா சுமார் அரை மணித்தியாலமாக அரங்கில் குழுமியிருந்த இரசிகர்களை மகிழ்ச்சிவெள்ளத்தில் மிதக்கச் செய்தது.தொடக்க விழாவின்போது தேசிய கொடியுடன் பொலிவூட் நடிகர் அக்சய் குமார் கம்பியில் தொங்கியவாறு மிதந்து வந்தார்.

அவரிடம் இருந்து மற்றொரு பொலிவூட் நடிகர் டைகர் ஷெரொப் தேசிய கொடியைப் பெற்றுக்கொண்டு அதனை மேடையின் உயரமான இடத்தில் நாட்டினார்.

தேசிய கொடி நாட்டப்பட்டதும் பொலிவூட் நடிகர்கள் இருவரும் ஹிந்தி பாடலுக்கு நடனமாடி இரசிகர்களை குதூலிக்கச் செய்தனர்.அவர்களைத் தொடர்ந்து தனது மகன் அமீனுடன் மேடையில் தோன்றிய இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இனிமையான பாடல் ஒன்றைப் பாடி இரசிகர்களையும் பாட வைத்தார். 

ரகுமான், அவரது மகன் மற்றும் சுவேதா மோகன் ஆகியோர் மற்றொரு பாடலை இணைந்து வழங்கினர்.இதனைத் தொடர்ந்து இந்திய சினிமா நட்சத்திரங்களால் நடத்தப்பட்ட இந்திய கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கில் நிரம்பி வழிந்த இரசிகர்களை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி இரசிகர்களையும் பிரமிக்க வைத்தன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு