கேரளா சென்ற நடிகர் விஜய்; உலக வரலாற்றில் குறுகிய நேரத்தில் அதிகம் தேடப்பட்ட விமானம் CORELLA AIR AVIATION!

ஆசிரியர் - Admin
கேரளா சென்ற நடிகர் விஜய்; உலக வரலாற்றில் குறுகிய நேரத்தில் அதிகம் தேடப்பட்ட விமானம் CORELLA AIR AVIATION!

14 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time) படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா வந்தடைந்தார் நடிகர் விஜய். அவரை மலர் தூவி வரவேற்றனர் கேரள ரசிகர்கள். உலக வரலாற்றில் முதன்முறையாக குறுகிய நேரத்திற்குள் அதிக நபர்களால் தேடப்பட்ட முதல் விமானம் என்ற பெயரை பெற்ற CORELLA AIR AVIATION.

'GOAT' திரைப்படம்: இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'THE GREATEST OF ALL TIME' திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 'AGS என்டர்டைன்மென்ட்' நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, அஜ்மல் அமீர், லைலா, ஜெயராம், பிரேம்ஜி, மோகன் மற்றும் வைபவ் ரெட்டி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

கேரளா சென்ற நடிகர் விஜய்: தமிழகத்தில் எந்த அளவுக்கு நடிகர் விஜய்க்கு ரசிகர் கூட்டம் உள்ளதோ அதே அளவிற்கு கேரளாவிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. கடைசியாக காவலன் திரைப்படத்திற்காக கேரளா சென்ற நடிகர் விஜய். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time) படத்தின் படப்பிடிப்பிற்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளா செல்கிறார். இதேபோல் அண்மையில் வெற்றி பெற்ற 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படத்தின் இயக்குனரான சிதம்பரம் பேட்டி ஒன்றில் விஜய் படம் வெளியாகும் போது கேரளா திருவிழா போல் காணப்படும் எனக் கூறினார். அதே போல் விஜய்யின் கடந்தாண்டு வெளியான 'லியோ' படமும் கேரளாவில் நல்ல வரவேற்பை பெற்றது.

CORELLA AIR AVIATION விமானம்: திருவனந்தபுரம் விமானநிலையத்தில் மாலை விமான நிலையம் வரும் நடிகர் விஜய்க்கு காலையிலிருந்து காத்திருந்தனர் கேரள ரசிகர்கள். கேரள மக்களே வியக்கும் அளவிற்கு விஜய் ரசிகர்களின் கூட்டம் அலை மோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல் அதிகாரிகள் தினறினர். பின்னர், திருவனந்தபுரம் விமானநிலையம் வந்தடைந்த நடிகர் விஜயை மலர் தூவி ஆரவாரத்துடன் வரவேற்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்யின் படம் மற்றும் பாடல்கள் வரும்பொழுது ரெக்கார்ட் பிரேக்கிங்கை நிகழ்த்தி செல்லும் அதேபோல உலக வரலாற்றில் முதன்முறையாக சென்னையில் இருந்து கேரளா விமான நிலையம் செல்லும், நடிகர் விஜய்யின் வருகையை எதிர்நோக்கி குறுகிய நேரத்திற்குள் அதிக நபர்களால் தேடப்பட்ட முதல் விமானம் CORELLA AIR AVIATION பெற்றுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு