யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் 31 மீனவர்கள் கடற்படையினால் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் 31 மீனவர்கள் கடற்படையினால் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 31 பேர் நேற்று புதன்கிழமை (20) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் 3 படகுகளில் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 மீனவர்களும், 2 படகுகளில் வந்து மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆறு மீனவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை - மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

பின்னர் யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர் மீனவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு