SuperTopAds

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு தேர்தல் மூலமாக 2024/25 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவர் தெரிவு

ஆசிரியர் - Editor III
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு தேர்தல் மூலமாக 2024/25 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவர் தெரிவு

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு தேர்தல் மூலமாக புதிய தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எம். ஐ.றைசுல் ஹாதி தெரிவு


கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2024/25 ஆம் ஆண்டுக்கான தலைவராக தேர்தல் மூலமாக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி எம். ஐ.றைசுல் ஹாதி தெரிவாகியுள்ளார்.

இலங்கையின்  60 வருட   வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின்  2024/25 ஆண்டுக்கான வரலாற்றில் முதல் தடவையாக சங்கத் தலைவரை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது தலைவர் தெரிவிற்காக சட்டத்தரணிகளான ஐ.றைசுல் ஹாதி மற்றும் ஆரிப் சம்சுதீன் ஆகியோர் போட்டியிட்டனர்.இதில் சிரேஷ்ட சட்டத்தரணி எம். ஐ.றைசுல் ஹாதி அதிகளவான வாக்குகளை  பெற்று கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவராக  சிரேஷ்ட சட்டத்தரணி எம். ஐ.றைசுல் ஹாதி தெரிவானார்.

மேற்படி  புதிய  நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம்   கல்முனை மாவட்ட நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில்   நடைபெற்றதுடன் தொடர்ந்து இவ் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது நடப்பு வருடத்திற்கான நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.

தொடர்ந்து செயலாளராக சட்டத்தரணி  ரோசன் அக்தரும் , பொருளாளராக  சட்டத்தரணி என்.ஏ.எம்.அஸாம் ஆகியோரும் ஏகமனதாக போட்டியின்றி  தெரிவு செய்யப்பட்டனர்.அத்துடன் இதர பதவி நிலைகளுக்கும் ஏனைய நிருவாகிகளும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.