பொருளாதார நெருக்கடி காலத்தில் பெண்களின் பங்களிப்பு பேசுபொருளாகிறது-பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்
பொருளாதார நெருக்கடி காலத்தில் பெண்களின் பங்களிப்பு பேசுபொருளாகிறது-பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்
பொருளாதார நெருக்கடி காலத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட சவால்களை எதிர்கொண்டிருந்தும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு பேசுபொருளாகிறது என கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் குறிப்பிட்டார்.
'பெண்களுக்கு ஆதரவளிப்பதன் மூலமாக பொருளாதார நிலைமாற்றம், நெருக்கடி நிலமைக்கு ஒரு பதிலடி' எனும் தொனிப் பொருளிலான இந்நிகழ்வு சர்வதேச மகளீர் தினத்தையொட்டி கல்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (20) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தததாவது
ஆண், பெண் என வேறுபாடுகள் இருந்தாலும் எல்லோரும் மனித வர்க்கமாக வகைப்படுத்தப்பட்டதுடன் கௌரவமாக வாழக்கூடிய உரிமையை அவர்களுக்கு உறுதிப்படுத்தல் வேண்டும். பெண்களின் தொழிலானது பொருளாதார நெருக்கடி காலத்தில் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. பாரம்பரிய வரம்புகளால் கட்டுண்டமையினால் அதன் பிரதிபலனை பெண்கள் அனுபவிக்க முடியாதிருக்கிறது.
ஆனால் பெண் தொழிலாளர்களின் உரிமைகள் அதன் நிலமைகள் கவலைக்கிடமாகவுள்ளது. பெண்களுக்கெதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் இலங்கையில் அதிகளவில் காணக்கூடியதாகவுள்ளது. ஆண்களிலும் பார்க்க பெண் வியாபாரிகள் கடன் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் காணப்படுகிறது. ஆனால் கடன்களைப் கூடுதலாக பெறுகின்ற வர்க்கமாக பெண்கள் இருக்கிறார்கள்.
இன்று கடன் வழங்கும் வங்கிகள் நாளுக்கு நாள் திறக்கப்பட்டு வருகின்றன. இவ் வங்கியில் கடன் பெற்றபவர்களாகவும். இலகு கடனில் பொருட்களை கொள்வனவு செய்பவர்களாகவும் குடும்பப் பெண்கள் இருக்கின்றனர். இவர்கள் மாதந்தோறும் கடன் பணத்தை கட்ட முடியாதிருக்கும் இக்கட்டான கூ10ழ்நிலை ஏற்படுமாகவிருந்தால் கடன் முகவர்களுக்குப் பயந்து சொந்த வீட்டில் இருக்க முடியாது மறைந்து வாழ முற்படுகின்றனர். காலப் போக்கில் இவ்விடயம் அவர்களுக்கு உளரீதியான தாக்கத்தை ஏற்படுத்தி உயிரை துச்சமாக நினைத்து செய்கின்ற தற்கொலைச் சம்பவத்தையும் அறியக்கூடியதாக இருக்கிறது என தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட உதவி நூலகர் கலாநிதி.எம். எம்.மஸ்ருபா கலந்து கொண்டு விசேட சொற்பொழிவாற்றினார். பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ், பொருளாதார நெருக்கடி காலத்தில் தொழிலாளர் வர்க்கத்தினர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றியும், பொறியியலாளர் எம்.எம். பதுலுல் ஹக் பொருளாதார நெருக்கடி காலத்தில் பெருந்தோட்டத் துறையினருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றியும், எம்.ஏ.சி.எம். ஜவாஹிர் பொருளாதார நெருக்கடி காலத்தில் வேலைவாய்பிற்காக புலம்பெயர்ந்து வாழ்கின்ற பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றியும், திருமதி.கே. ஜெனிற்றா பொருளாதார நெருக்கடி காலத்தில் சுதந்திர வர்த்தக வலயத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றியும் விரிவுரையாற்றினர்.
இந்நிகழ்வில் அரச அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், சிவில் மக்களும் கலந்து கொண்டனர்.