2024 சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு கிழக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் நிகழ்வு

ஆசிரியர் - Editor III
2024 சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு கிழக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் நிகழ்வு

2024 சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு கிழக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் நிகழ்வு

2024 சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு கிழக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் நிகழ்வு ஒன்று காரைதீவு தனியார் மண்டபத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தாணீஸ் ரஹ்மதுல்லாஹ் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸத்தீனும் கௌரவ அதிதிகளாக மயோன் Group Of Companies நிறுவனத்தின் பணிப்பாளரும் ரிஸ்லி முஸ்தபா கல்வி அபிவிருத்தி அமைப்பின் தலைவருமான ரிஸ்லி முஸ்தபா காரைதீவு பிரதேச சுகாதார அதிகாரி வைத்தியர் தஸ்லீமா வஸீர் கல்முனை கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் ஜிஹானா அலீப் அம்பாறை மாவட்ட மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேக்கா எதிரிசிங்க ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் சிறப்பு அதிதிகளாக Eastern Socio அபிவிருத்தி அமைப்பின் தலைவி கலாநிதி வாஹூதா முகைதீன் இம்தியாஸ் காரியப்பர் கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் ஆலோசகரும் அதிபருமான றிப்கா அன்ஸார் றிஸ்லி முஸ்தபா கல்வி அபிவிருத்தி அமைப்பின் செயலாளரும் திடீர் மரண விசாரணை அதிகாரியுமான ஏ.எச்.அல் ஜவாஹிர் நிந்தவூர் பிரதேச மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தரும் கிழக்கு இளைஞர் அமைப்பின் ஆலோசகருமான ஏ.ஆர் றிஸ்வானுல் ஜன்னாஹ் visiontra immigration consultants (குடியகல்வு ஆலோசகர்) நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் வினோத்குமார்  கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் ஆலோசகர் ஆயிசா பானு ஹஸன் உள்ளிட்ட ஏனைய பிரமுகர்கள் கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் எழுத்தாளர்கள் அறிவிப்பாளர்கள் ஊடகவியலாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வானது மத அனுஸ்டானத்துடன் ஆரம்பமாகி தேசிய கீதம் வரவேற்புரையை கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் எம்.ஐ.எப்.சஜீனாவும் தலைமை உரையை கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தாணீஸ் ரஹ்மதுல்லாஹ் மேற்கொண்டார்.தொடர்ந்து கவிதை மகளீர் தின விசேட உரை கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வுகள் உட்பட மகளீர் தின நினைவு மலர் வெளியீடு அதிதிகளால் வெளியீட்டு வைக்கப்பட்டது.

பின்னர் அதிதி உரை சிறப்பு பேச்சு கௌரவ அதிதி உரை பிரதம அதிதி உரை விருது வழங்கல் நிகழ்வு என்பன தொடர்ச்சியாக இடம்பெற்று நன்றி உரையினை எம்.ஆதிக் மேற்கொண்டு நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு