சுயாதீன ஊடகவியலாளர் மீது மருதமுனையில் வைத்து தாக்குதல்

ஆசிரியர் - Editor III
சுயாதீன ஊடகவியலாளர் மீது மருதமுனையில் வைத்து தாக்குதல்

சுயாதீன ஊடகவியலாளர் மீது மருதமுனையில் வைத்து தாக்குதல்

அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் பிராந்திய செய்தியாளராக செயற்பட்டு வந்த வாஹிட் முகம்மது ஜெஸீல் உள்ளுர் அரசியல் வாதியின் ஆதரவாளர்களால் தாக்குதலுக்குள்ளான நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை(23) இரவு குறித்த செய்தியாளர் மருதமுனை பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய 65 மீற்றர் வீட்டு திட்டம் தொடர்பில் ஆராயும் முகமாக அங்கு சென்ற போது இடைநடுவில் மறித்த சிலர் தடி பொல்லால் செய்தியாளரை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர்.

இதன் போது குறித்த தாக்குதலினால் பாதிக்கப்பட்ட செய்தியாளர் அப்பகுதி வீடு ஒன்றினுள் பாதுகாப்பிற்காக சென்று அடைக்கலமாகி அங்கிருந்து பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரை உதவிக்கு அழைத்துள்ளார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  செய்தியாளர் தன்னை  கொலை செய்து  சர்ச்சைக்குரிய வீட்டுத்திட்ட  ஆதாரங்களைப் பறிக்கும் நோக்குடன்  முன்னாள் மாநகபை உறுப்பினர்  ஏ.ஆர் அமீர் என்பவனின் சகோதரன் இஜாஸ் மருமகன் அப்றாஸ்  நஜாத் மேசன்   வீசி வீதியில் சேர்விஸ் செட் வைத்திருக்கும் கிஜிலி  என   8 பேர்   இரும்புக்கம்பி  தலைக்கவசம் போன்றவற்றால் சரமாரியாக தாக்கியதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது  சிகிச்சை பெற்று வெளியேறியுள்ள இச்செய்தியாளர் பெரிய நீலாவணை பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய இரு சந்தேக நபர்கள் பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு