Goat படத்தில் தளபதியின் தங்கையாக நடிப்பவர் யார் தெரியுமா!!

ஆசிரியர் - Editor II
Goat படத்தில் தளபதியின் தங்கையாக நடிப்பவர் யார் தெரியுமா!!

தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் Goat படத்தில் தளபதியுடன் இணைந்து பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா, பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் தளபதியின் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். மேலும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக முதல் பாடல் எப்போது வெளியாகும் என்று தான் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், Goat படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இளம் வயது விஜய்யின் தங்கையாக பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள் அபியுக்தா மணிகண்டன் என்பவர் நடிக்கிறாராம். இது அவருக்கு அறிமுக திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்தான் இவர்...

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு