தமிழக மீனவர் கைது விவகாரத்தில் மோடி தலையிட வேண்டும்!! -ஸ்டாலின் வலியுறுத்தல்-

ஆசிரியர் - Editor II
தமிழக மீனவர் கைது விவகாரத்தில் மோடி தலையிட வேண்டும்!! -ஸ்டாலின் வலியுறுத்தல்-

தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி இராஜதந்திர ரீதியாக தலையிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்தும், படகுகளை இலங்கை அரசு நாட்டுடைமை யாக்குவதை கண்டித்தும் இராமேஸ்வரத்தில் சில தினங்களுக்கு முன்னர் படகுகளில் கறுப்புக் கொடியை கட்டி 700ற்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்செய்தியை மேற்கோள் காட்டி எக்ஸ் சமூகவலைத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இராஜதந்திர ரீதியாக தலையிட வேண்டும். 3 மீனவர்கள் அநியாயமாக நீண்ட காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகள் இலங்கை அரசால் தேசியமயமாக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது கவலையளிக்கிறது. தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவதை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி செய்ய வேண்டும்.

மீனவர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுப்பது முக்கியம். ஏனென்றால் அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைமிக்க இந்தியர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு