SuperTopAds

700 கோடி செலவில் அபுதாபியில் இந்துக் கோயில்!! -திறந்து வைத்தார் பிரதமர் மோடி-

ஆசிரியர் - Editor II
700 கோடி செலவில் அபுதாபியில் இந்துக் கோயில்!! -திறந்து வைத்தார் பிரதமர் மோடி-

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் 700 கோடி ரூதபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் மோடி நேற்று முந்தினம் திறந்துவைத்தார்.

2 நாள் பயணமாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். நேற்று முந்தினம் துபாய் சென்ற மோடி, அந்த நாட்டு ஜனாதிபதி முகமதுபின் சையது அல் நஹ்யானை சந்தித்துப் பேசினார். 

இந்நிலையில் அன்று மாலை அபுதாபியில் 700 கோடி ரூபா செலவில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்துப் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடைபெற்ற பூஜைகளிலும் அவர் கலந்துகொண்டார்.

துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் வீதியில் உள்ள அல் முரக்கா பகுதியில் இந்த சுவாமி நாராயண் கோயில் கட்டப்பட்டுள்ளது. பி.ஏ.பி.எஸ் அமைப்பு சார்பில், பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக இந்தக் கோயில் அமைந்துள்ளது. 

இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலிய மார்பிள் கற்கள் இந்தியாவில் செதுக்கப்பட்டு பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கோயிலில் பயன் படுத்தப்பட்டன.

அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நன்கொடையாக வழங்கிய 27 ஏக்கரில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. 

2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி துபாய் சென்ற போது நிலத்தை தானமாக வழங்கினார் இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான். இந்த பிரமாண்டமான கோயிலில் ஒரே நேரத்தில் 10,000 பேர் வரை தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.