தொடரும் நிஸ்ஸங்கவின் அபார துடுப்பாட்டம்!! -ஆப்கானை ஒருநாள் தொடரை வெள்ளையடிப்பு செய்த இலங்கை-

ஆசிரியர் - Editor II
தொடரும் நிஸ்ஸங்கவின் அபார துடுப்பாட்டம்!! -ஆப்கானை ஒருநாள் தொடரை வெள்ளையடிப்பு செய்த இலங்கை-

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை 7 இலக்குகளால் வெற்றி பெற்றிருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆப்கானை இலங்கை 3-0 என வெள்ளையடிப்பு செய்துள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் முன்னதாக ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தது.

ஆப்கான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரினை 2-0 என ஏற்கனவே கைப்பற்றிய இலங்கை இப்போட்டிக்கான அணியில் இரு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. இலங்கை குழாத்தில் மகீஷ் தீக்ஷன, வனிந்து ஹஸரங்க ஆகியோருக்குப் பதிலாக துனித் வெல்லாலகே மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த ஆப்கான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஹ்மத் சாஹ் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தினை வழங்கியிருந்தனர். இதில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 48 ஓட்டங்கள் எடுக்க, றஹ்மத் சாஹ் இந்த ஒருநாள் தொடரில் தன்னுடைய அடுத்தடுத்த அரைச்சதங்களுடன் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன் பின் மத்திய வரிசையில் களம் வந்த அஷ்மத்துல்லா ஒமர்சாயின் அரைச்சத உதவியோடு 48.2 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் அனைத்து இழந்து 266 ஓட்டங்களை ஆப்கானிஸ்தான் அணி பெற்றுக் கொண்டது. அஸ்மத்துல்லா ஒமர்சாய் 59 பந்துகளில் 4 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் ப்ரமோத் மதுசான் 3 இலக்குகளையும், அசித பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே மற்றும் அகில தனன்ஞய ஆகியோர் தலா 2 இலக்குகள் வீதம் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 267 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி அதிரடியான ஆட்டத்தோடு போட்டியின் வெற்றி இலக்கினை 35.2 பந்துப் பரிமாற்றங்களில் 3 இலக்குகளை மட்டும் விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தது.

இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் பெதும் நிஸ்ஸங்க தன்னுடைய 5 ஆவது ஒருநாள் சதத்தோடு 101 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 16 பௌண்டரிகள் அடங்கலாக 118 ஓட்டங்கள் பெற்றார். 

மறுமுனையில் அவிஷ்க பெர்னாண்டோ வெறும் 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 91 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் இது அவரின் 6 ஆவது ஒருநாள் அரைச்சதமாகவும் மாறியது. அதோடு குசல் மெண்டிஸ் வெறும் 29 ப ந்துகளில் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 40 ஓட்டங்கள் பெற்றார்.

ஆப்கான் பந்துவீச்சில் கைஸ் அஹ்மட் 2 இலக்குகளை கைப்பற்றிய போதும் அது வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் இப்போட்டியில் சதம் விளாசிய பெதும் நிஸ்ஸங்க தெரிவாகினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு