ராமாயணம், மகாபாரதம் பொய்!! -பாடம் நடத்திய ஆசிரியை பணி நீக்கம்-

ஆசிரியர் - Editor II
ராமாயணம், மகாபாரதம் பொய்!! -பாடம் நடத்திய ஆசிரியை பணி நீக்கம்-

இந்தியாவின் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள செயின்ட் தெரேசா பாடசாலையில் அருட்சகோதரி பிரபா ( வயது 32) சமூகவியல் ஆசிரியராக‌ பணியாற்றி வந்தார். 

அவர் கடந்த 8 ஆம் திகதி 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போது, ராமாயணம், மகாபாரதம் ஆகியவை நிஜமல்ல கற்பனை புராணங்கள் என கூறியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவர்கள் தங்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதை பற்றிதகவல் அறிந்த பா.ஜ.க, விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், இந்து ஜாகர்ண வேதிகே ஆகிய அமைப்பினர் படசாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிரதமர் மோடி, ராமர் கோயில் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியை அவதூறாக பேசியதால் அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கினர்.

இதனைத் தொடர்ந்து செயின்ட் தெரேசா பாடசாலை நிர்வாகம் ஆசிரியை பணியில் இருந்து விடுவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு